×

விவி மினரல்ஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு....... 30 வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை: விவி மினரல்ஸ் குழுமத்திற்கு தொடர்புடைய 24 வங்கி லாக்கர்கள் மற்றும் 30 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. விவி மினரல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான 10 இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக சென்னையில் இருந்து வைகுண்டராஜன் விமானம் மூலம் தூத்துக்குடி அழைத்து செல்லப்பட்டார். திசையன்விளையில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வைகுண்டராஜனிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

விவி மினரல்ஸ் நிறுவனம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் உள்ள தாது மணலை எடுத்து சுத்திகரிப்பு செய்து அதில் கிடைக்கும் கார்னெட், ரூட்டைல், இலுமனைட், சிலிக்கான் போன்ற  தாதுக்களை கடந்த 25 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தாது மணல் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வைகுண்டராஜனுக்கு சொந்தமான 100 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த  சோதனையில் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஆவணங்கள், ரூ.7 கோடி பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vivi Minerals Company , VV Minerals, IT Raid, income tax, vaiguntarajan,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே...